பயணிகளுடன் பாரிய விபத்திலிருந்து தப்பியது சிறிலங்கன் எயார்லைன்ஸ் – இன்று மாலை சம்பவம்.

நேற்று (14) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியாவின் தமாம் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் ஹைட்ரோலிக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானி 02 மணி 10 நிமிடங்களுக்குப் பிறகு கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.

 

 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-1263 146 என்ற விமாமே பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் கட்டுநாயக்காவிற்கு திரும்பியது.

இந்த விமானம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ-320 ஏர்பஸ் ஆகும்.

இன்று மாலை 5.45 மணிக்கு கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்ட விமானி இரவு 07.55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கினார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளை வேறொரு விமானத்தில் தமாமுக்கு திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது.