தடுப்பூசி அட்டை தொடர்பில் பொது மக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

கொவிட்-19 தடுப்பூசி அட்டைகளை லெமினேட் செய்யாது பாதுகாப்பாக வைத்திருக்குமாறு பொது மக்களிடம், சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் ஹேமந்த ஹேரத் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏனெனில் எதிர்காலத்தில் நான்காவது டோஸ் தேவைப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

தற்போது வழங்கப்பட்டுள்ள தடுப்பூசி அட்டை எடுத்துச் செல்வதற்கு ஏற்றதல்ல என குறிப்பிட்ட அவர், ஒரு தரவுத்தளத்தில் தகவல் சேர்க்கப்படும் வரை மற்றும் QR குறியீடு அமைப்பு அறிமுகப்படுத்தப்படும் வரை தடுப்பூசி அட்டையை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் கையடக்கத் தொலைபேசி ஊடாக இந்த முறைமையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார். எனவே , தடுப்பூசி அட்டையை லெமினேட் செய்வதைத் தவிர்க்கு மாறும் அவர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.