யாழ்ப்பாணம் தொடர்ந்து கொரோனா அபாயத்திலேயே இருக்கின்றது..!! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

யாழ்.மாவட்டத்தில் இப்போதும் கொரோனா தொற்று பரவக்கூடிய அபாயத்திற்குள்ளேயே இருக்கின்றது. நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில் நோய் தொற்றுக்குள்ளவர்கள் எமது மாவட்டத்திற்குள் நுழைய வாய்ப்புக்கள் உள்ளது. மக்கள் விழிப்பாக இருப்பது நல்லது.மேற்கண்டவாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். இது குறித்து ஊடகங்களை சந்தித்து மேலும் அவர் மேலும் தெரிவிக்கும் போது; கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தற்போதும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுகின்றார்கள்.வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமான இடங்களில் இருந்தவர்களும் சந்தேகத்தின் அடிப்படையில் இங்கு கொண்டுவரப்படுகின்றார்கள்.அவர்களிடம் சோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது.இருப்பினும், அண்மையில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை.ஊடரங்கு தளர்த்தப்பட்டதால் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதனால் வைத்திய சாலைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் கனிசமாக அதிகரித்துள்ளது.நாட்டிலும் யாழ்ப்பாணத்திலும் கொரோனா தொற்றுக்காக அபாயம் முற்றுமுழுதாக நீங்கவில்லை. எனவே மிக கவனமாக இருக்க வேண்டும். வைத்திய சாலை உழியவர்களும், பொது மக்களும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.கொரோனா நோய் தொற்று தொடர்பான அடிப்படையான வேண்டுகைகள்,நடவடிக்கைகளை நிச்சயமாக பின்பற்ற வேண்டும். தற்போது ஊடரங்கு சட்டம் அமுலில் இல்லை. இதனால் ஓர் இடத்தில் இருப்பவர்கள் இன்னுமொரு இடத்திற்கு சென்று வரும் சாத்தியக்கூறு உள்ளது. ஆகவே தொற்றுக்குள்ளானவர் இப்பகுதிக்கு வந்தால் அவரையும்,அவருடன் தொடர்புடையவர்களையும் விரைவாக கண்டுபிடிப்பதற்காகவே பி.சி.ஆர் பரிசோதனைகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகின்றது.வைத்திய சாலையின் அன்றாட அனைத்து சேவைகளும் தற்போது நடைபெற்று வருகின்றனது. குறிப்பாக சத்திரசிகிச்சைகளும் நடாத்தப்படுகின்றது.

இதுதவிர வெளிநோயாளர் பிரிவு மற்றும் பல்வேறு மருத்துவ கிளினிக் போன்றவையும் நடக்கின்றது. வைத்திய சாலையில் வருவபர்வகளின் முழுமையான விபரங்கள் சேகரிக்கப்படுகின்றது. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பாகவும், தொற்றாளர்கள் மற்றும் தொற்று அபாய பகுதியுடன் தொடர்புள்ளதா என்ற தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.இத்தகவல்களைக் கொண்டு இங்கு பருபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். கொரோனாவால் ஏற்பட்டுள்ள சாவால்களுக்கு மத்தியில் இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. வைத்தியசாலை பணியாளர்களுக்கு கொரோனாவில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொண்டு, நோயாளர்களை அணுகுவது என்பது தொடர்பாக பயிற்சிகளையும், விழிப்புணர்வுகளையும் கொடுத்து வருகின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.