கடக லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணநலன்கள்? வாங்க என்னவென்று பார்ப்போம்

கடக லக்னத்தின் அதிபதி சந்திரன் ஆவார். கடக லக்னத்தில் பிறந்தவர்கள் உடலாலும் மனதாலும் தூய்மையானவர்கள். இவர்கள் அழகான மற்றும் கவர்ச்சியான உடல் அமைப்பை கொண்டவர்கள். வாக்கு சாதுர்யம் மிகுந்தவர்கள். இவர்கள் லட்சியத்தை அடைய கடுமையாக உழைப்பார்கள். புதிதாக எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்கள் நல்ல அறிவாளிகளாகவும், புத்திக்கூர்மை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்களிடம் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும்.

கடக லக்னத்தில் பிறந்தவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். பெரிய பெரிய ஆசைகளை மனதில் பூட்டி வைத்திருப்பார்கள். அந்த ஆசையை அடைய கடுமையாக உழைக்கவும் தயங்க மாட்டார்கள். தானம் தர்மம் செய்வதில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும்.

தாராள மனப்பான்மை மேலோங்கி இருக்கும். செல்வம் சேர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். கலைகளிலும், கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்குவார்கள். ஆனால் திருமண வாழ்கையில் பல போரட்டங்கள் இருக்கும். கணவன் மனைவி இடையே விட்டு கொடுத்து போகும் மனப்பான்மை இருக்காது.

செல்வ செழிப்புடன் வாழக்கையை வாழ ஆசைபடுவார்கள். இவர்கள் தண்ணீரில் அதிக விருப்பம் இருக்கும். தண்ணீரை கண்டால் சிறு குழந்தை போல மாறி விளையாடுவார்கள். நண்பர்களிடையே விரோதத்தை வளர்த்து கொள்வார்கள். இவர்கள் பெரும்பாலோனோர் சற்று பலவீனமான உடலமைப்பை கொண்டவர்கள்.

இவர்கள் சண்டை என்று வந்து விட்டால் ஒதுங்கி போகவே இருப்பார்கள். செயல்களில் மந்தமாகவும், கவன குறைவாகவும் இருப்பர். இவர்கள் விவேகமான புத்திசாலிதனத்தை கொண்டவர்கள். கலைகளிலும், இசையிலும் மிகவும் விருப்பம் கொண்டவர். எதையும் ஆர்வமுடன் கற்பார்கள்.

இவர்கள் மற்றவர்களின் எண்ணங்களை உடனடியாக புரிந்துகொண்டு செயல்படுவார்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிபளிக்க கூடியவர்கள். சிலசமயங்களில், இவர்கள் தைர்யம் மிகுந்தவர்களாக காட்சியளிப்பர். துணிச்சலான காரியங்களை செய்ய கூடியவர்கள்.

ஆனால் இவர்கள் மனது அலைபாய்ந்து கொண்டே இருக்கும். நல்ல கற்பனா சக்தி மிகுந்தவர்கள். நாடோடி போல அலைந்து திரிந்து நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்வார்கள் விருந்தினர்களை அழைத்து உபசரிப்பதில் வல்லவர்கள். மொத்தத்தில் கடக லக்னத்தில் பிறந்தவர்கள் நல்லவர்கள் மற்றும் கடும் உழைப்பாளிகள்.