உயிரைப் பாதுகாக்க வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள்..!!

உயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையினால், இவ்வாறு பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து அதிகளவில் இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.அரசியல் புகலிடம் கோரி வெளிநாடு சென்றவர்கள், புலம்பெயர் தமிழ் சமூகத்தினர் உள்ளிட்டவர்களும் இவ்வாறு நாடு திரும்பியவர்களில் உள்ளடங்குகின்றனர்.கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மே மாதம் 7ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து 6,7679 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கையில் உயிரிழப்புக்கள் மிகவும் குறைந்தளவு காணப்பட்டதனால், இவ்வாறு வெளிநாடு வாழ் இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.