சங்கானை பகுதியில் உள்ள வீடொன்றினுள் வாள்வெட்டு குழு புகுந்து அட்டகாசம்

யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றிரவு வாள்வெட்டு குழு புகுந்து அட்டகாசம் செய்துள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட குழு அங்கு சென்று வீட்டின் கதவுகள், முச்சக்கர வண்டி, மீன் தொட்டி, தண்ணீர் குழாய், கதிரைகள் மற்றும் வேலி தகரங்கள் என்பவற்றினை வாளினால் வெட்டி சேதப்படுத்தியுள்ளதுடன்,முச்சக்கர வண்டிக்கும் தீ மூட்டியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்,மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.