யாழ்.அச்சுவேலி – பத்தைமேனி பகுதியில் விபத்து! இளைஞர்கள் இருவர் காயம்….

யாழ்.அச்சுவேலி – பத்தைமேனி சந்தியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.