இலங்கைக்கான சீனா துாதுவர் வடக்கிற்கு விஜயம்!

இலங்கைக்கான சீனா நாட்டின் துாதுவர் கீ சென்ஹொங் (Kei Senhong) வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த விஜயத்தின் போது அவர் எதிர்வரும் புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இருநாள்கள் தங்கியிருப்பார் என சீன தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதன்போது  ஆளுநர் ஜீவன் தியாகராஜா உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார்.

இத்துடன் கடற்றொழிலாளர்களுக்கான ஒருதொகுதி உபகரணங்களை வழங்கும் நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சீன தூதரகம் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில காலங்களில் வடக்கிலுள்ள மூன்று தீவுகள் சீனாவிடம் கையளிக்கப்பட்டவுள்ளதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்தது.

 

மேலும் குறித்த மூன்று தீவுகளில் முன்னெடுக்கப்படவிருந்த மின் திட்டத்தை சீனா கைவிட்டுள்ள நிலையிலேயே அந்நாட்டு தூதுவர், வடக்குக்கான பயணத்தை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.