கோடிகளை கொட்ட தயார்! ஒரு வீரரை தட்டி தூக்க காத்திருக்கும் 5 ஐபிஎல் அணிகள்

தென்னாப்பிரிக்க நட்சத்திர வீரர் குவின்டன் டி காக்கை ஐபிஎல் ஏலத்தில் தட்டி தூக்க 5 அணிகள் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2022 ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மா (16 கோடி), ஜஸ்பரீத் பும்ரா (12 கோடி), கெய்ரன் பொல்லார்ட் (6 கோடி), சூர்யகுமார் யாதவ் (8 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டனர்.

குவின்டன் டி காக், பாண்டியா சகோதரர்கள், இஷான் கிஷன் போன்ற நட்சத்திர வீரர்கள் தக்க வைக்கப்படவில்லை. இந்நிலையில், 77 ஐபிஎல் போட்டிகளில் 2256 ரன்கள் குவித்த குவின்டன் டி காக்கை ஏலம் எடுக்க 5 அணிகள் கடுமையாக போட்டி போடும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக கோடிகளை கொட்டி கொடுக்க தயாராகவே அந்த அணிகள் உள்ளது.

பஞ்சாப் அணி

பஞ்சாப் கிங்ஸ் அணியில் கேப்டன் கே.எல்.ராகுல் தக்கவைக்கப்படவில்லை. அவர் விக்கெட் கீப்பராகவும், ஓபனராகவும் இருந்தார். இந்த இடத்தை நிரப்பக் கூடியவர்களில் முதன்மையானவர் குவின்டன் டி காக்தான். ஆகவே அவரை ரூ 12 கோடி வரை கொடுத்து ஏலம் எடுக்க அணி நிர்வாகம் தயாராக உள்ளது.

ஹைதராபாத் அணி

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஜானி பேர்ஸ்டோ, விருத்திமான் சாஹா இரண்டு பேரையும் தக்கவைக்கவில்லை. இவர்களின் இடத்தை நிரப்ப, குறிப்பாக பேர்ஸ்டோவின் இடத்தை நிரப்ப டி காக் சிறந்த வீரராக இருப்பார்.