பறந்த சிக்சர்களால் அபார வெற்றி! மீண்டும் பார்முக்கு திரும்பிய இலங்கை நட்சத்திர வீரரால் ரசிகர்கள் உற்சாகம்

லங்கா ப்ரீமியர் லீக் போட்டியில் காலி கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தியது கொழும்பு ஸ்டார்ஸ் அணி.

அணியின் தலைவராக இருந்தும், காயம் காரணமாக முதல் 4 ஆட்டங்களில் விளையாடாத அஞ்சலோ மேத்யூஸ், முதல் போட்டியில் 57 பந்துகளில் 73 ரன்களை எடுத்தார். மூன்று சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளை உள்ளடக்கிய மேத்யூஸின் இன்னிங்ஸ், இந்த தொடரில் ஒரு பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச தனிநபர் ஓட்டமாக இருந்தது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றிரவு ஆரம்பமான லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரின் 13 ஆவது போட்டி மேத்யூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் மற்றும் பானுக ராஜபக்ஷ தலைமையிலான காலி கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையே ஆரம்பமானது.

மழை காரணமாக 18 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் ஆரம்பிக்கப்பட்ட இப் போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு ஸ்டார்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடியது. அணியின் ஆரம்ப வீரரான குசல் பெரேரா நேற்றைய ஆட்டத்தில் இடம்பெறாத காரணத்தினால் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்காத மேத்யூஸ் கொழும்பு ஸ்டார்ஸுக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினார்.