பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை…பேரூந்தில் இப்படித் தான் கொரோனா பரவுமாம்.!!

பேருந்துகளில் பயணிகள் பயணிக்கும் போது கொவிட் -19 வைரஸ் தொற்று எவ்வாறு பரவும் என்பது தொடர்பில் மொரட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலரினால் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிக்கை போக்குவரத்து அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதற்கமைய பேருந்துகளில் பயணிக்கும் போது ஜன்னல்களை திறந்து வைத்தால் பேருந்துக்குள் வரும் காற்றினால் அதிக கொவிட் -19 ஆபத்து பின் பக்க ஆசனங்களில் உள்ளவர்களுக்கே ஏற்படும். அத்துடன், பின்பகுதிக்கு செல்லும் காற்றும் மீண்டும் சுற்றி பேருந்தின் முன் பகுதிக்கு வரும்.எனவே ஒரு கொவிட் -19 தொற்று நோயாளி பேருந்தில் இருந்தால் அவர் தும்மும் போது பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படக் கூடும் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் பேருந்தில் நின்றுக் கொண்டு சென்றால் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளாகும் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கும் ஆபத்துக்குள் உள்ளது.பேருந்துககளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு பயணிகளை அழைத்துச் சென்றால், அனைத்து பயணிகளும் முக கவசம் அணிந்திருந்தல் வேண்டும். அத்துடன் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்திக் கொள்வது கட்டாயமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.