கால்வாயில் துாண்டில் போட்டு விளையாடிய சிறுவர்களின் துாண்டிலில் சிக்கிய குண்டு..!

யாழ்.மடம் வீதியில் உள்ள கால்வாய் ஒன்றில் துாண்டில் போட்டு விளையாடிய சிறுவர்களின் துாண்டிலில் வெடிகுண்டு சிக்கியுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, மடம் வீதியில் உள்ள கால்வாயில் நேற்றய தினம் சிறுவர்கள் சிலர் துாண்டில் போட்டு விளையாடியுள்ளனர்.

இதன்போது துாண்டிலில் எதோ சிக்கியிருப்பதை அறிந்த சிறுவர்கள் துாண்டிலை வெளியே இழுத்தபோது பை ஒன்று வெளியே வந்துள்ளது. அதனை திறந்து பார்த்தபோது அதனுள் குண்டு ஒன்று இருப்பது தொிந்துள்ளது. உடனடியாக சம்பவம் தொடர்பில் சிறுவர்கள் பெற்றோருக்கு கூறியுள்ளனர்.

பெற்றோர் யாழ்.பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் விசேட அதிரடிப்படை உதவியுடன் குண்டை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.