நள்ளிரவுடன் நடைமுறைக்கு வரும் வகையில் கோட்டாபய வெளியிட்ட விசேட வர்த்தமானி

அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa)  நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவுறுத்துவதாக அரசதலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் சாசனத்தின் பிரகாரம் அரசதலைவருக்கான அதிகாரத்தின் அடிப்படையில் நேற்றைய தினம் நள்ளிரவுடன் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடர்  எதிர்வரும் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.