பழைய கட்டிடமொன்றின் சுவரை இடிக்க முயன்ற இராணுவ சிப்பாய்க்கு நேர்ந்த சோகம்

சுவரின் இடிபாடுகளில் சிக்கி இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் தியத்தலாவை இராணுவக் கல்லூரிக்குள் இடம்பெற்றுள்ளது.

பழைய கட்டிடமொன்றின் சுவரை இடிக்க இராணுவ வீரர் முற்பட்ட போது அது இடிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இராணுவ வீரர் தியத்தலாவை வைத்தியசாலையில் இருந்து பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் மடுல்சீமை பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடைய இராணுவ வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.