பண்டிகைக் காலத்தில் நாட்டை முடக்குவதா? பயணத்தடையா? வெளியான அறிவிப்பு

பண்டிகைக் காலங்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை முடக்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அவ்வூடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முடக்கப்படுவது தொடர்பில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன்
அரசாங்கம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் எவ்வாறாயினும், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் நாட்டை முடக்காமல் பயணத்தடைகளை மாத்திரம் நடைமுறைப்படுத்த யோசனையை சுகாதார பிரிவு முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.