மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால் குருக்கள் மரணம்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குருக்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் ஆனைக்கோட்டையை சேர்ந்த இரத்தினசபாபதி ஜெகதீஸ்வர குருக்கள் (வயது 70) என்பவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் மதியம் கோவில் பூசை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது,

எதிரேவந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. படுகாயமடைந்த குருக்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.