கொரோனா அபாயத்தினால் கொழும்பில் முடக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் முழுமையாகத் திறப்பு..!!

தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொழும்பு 12, பண்டாரநயக்க மாவத்தை மற்றும் ஜாஎல, சுதுவெல்ல பிரதேசங்கள் மீண்டும் திறப்பட்டுள்ளன. கொரோனா நோயாளிகள் அதிகம் அடையாளம் காணப்பட்ட நிலையில் தனிமைபடுத்தப்பட்டிருந்த குறித்த பகுதிகளை மீண்டும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதற்கமைய இலங்கையில் தற்போது எந்தவொரு பகுதியும் தனிமைப்படுத்தப்பட என இராணுவத் தளபதி  குறிப்பிட்டுள்ளார்.பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் மேலும் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.அவர்கள் மீண்டும் வீட்டிற்கு சென்ற பின்னர், வீட்டை விட்டு வெளியேறாமல் வைத்திய ஆலோசனைகளுக்கமைய செயற்பட வேண்டியது கட்டாயமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.