அம்பாறை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 51 எய்ட்ஸ் நோயாளர்கள்

அம்பாறை மாவட்டத்தில் 51 எய்ட்ஸ் நோயாளர்கள் காணப்படுவதாகவும், கல்முனை பிராந்தியத்தில் 4 எய்ட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஐக்கிய நாடுகள் சபையினால் டிசம்பர் 1 ஆம் திகதி எய்ட்ஸ் தினமாக கொண்டாடப்பட்டது. 1981 ஆண்டு முதல் எய்ட்ஸ் நோயாளி அடையாளம் காணப்பட்டது.

அதனை தொடர்ந்து தற்போது வரை 37 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையை பொறுத்தமட்டில் 2,600 பேர் எய்ட்ஸ் நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்றைய தினம் இலங்கையில் 1000 எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மறைந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் 51 எய்ட்ஸ் நோயாளர்களும், கல்முனை மாவட்டத்தில் 4 எய்ட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.