இலங்கையில் எரிவாயு சிலிண்டரை கொள்வனவு செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டில் தொடர்ச்சியாக எரிவாயுக்கள் வெடித்து பெரும் பீதியை மக்கள் மத்தியில் கிளப்பியுள்ளன.

இவ்வாறு எரிவாயு வெடிப்புக்கான காரணங்களை அரசாங்கம் முறையாக தெரிவிக்காமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளன.

இந்த நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்யும்போது, அதன் முத்திரையிடப்பட்ட பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள கால வரையறை தொடர்பில், அவதானத்துடன் இருக்குமாறு, வலுசக்தி நிபுணர்கள் பொதுமக்களைக் கோரியுள்ளனர்.

சமையல் எரிவாயு கொள்கலன், 5 ஆண்டு காலப்பகுதிக்குள், தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலுசக்தி நிபுணர் அனில் டி சில்வா(Anil de Silva) தெரிவித்துள்ளார்.