யாழ்.நீர்வேலியில் 3 வாள்களுடன் விசேட அதிரடிப்படையினால் ஒருவர் கைது!

யாழ்.நீர்வேலி பகுதியில் 3 வாள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

நீர்வேலி மேற்கை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், 3 வாள்கள் மீட்கப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த கைது சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.