நாடாளுமன்றில் பசிலை வாயடைக்க வைத்த சஜித் தரப்பு.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்த சில கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதையடுத்து பசில் ராஜபக்(Basil Rajapaksa)ஷ வாயடைத்துப் போனார்.

இலங்கையில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க முயற்சித்ததாகவும், ஆனால் அதற்கான நேரம் வழங்கப்படவில்லை என்றும் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா(Harsha de Silva), அது உண்மைக்குப் புறம்பானது. எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கால அவகாசம் கோரவில்லை என தெரிவித்துள்ளார்.

இதற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உரிய பதில் அளிக்கத் தவறிவிட்டார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியம் தற்போதைய அரசாங்கத்திற்கு மிகப்பெரிய தொகையான 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம்(Kabir Hashim), கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்த பணம் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார். அந்த கருத்துக்கும் பசில் ராஜபக்ச பதிலளிக்கவில்லை