யாழில் கொரோனாத் தொற்றினால் குணமடைந்தவர்களுக்கு மீண்டும் வைரஸ் அறிகுறிகள்..!! பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வெளியிட்ட தகவல்..!!

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று யாழ்ப்பாணம் திரும்பிய 5 பேருக்கு மீண்டும் கொரோனா அறிகுறிகள் உள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்தமாதம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் யாழ்ப்பாணம் திரும்பியிருந்த அரியாலையைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் அரியாலைப் பகுதியை சேர்ந்தவர்கள். கடந்த மாதம் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று இரண்டு கிழமைக்கு முன்னர் வீடு திரும்பியவர்கள்.நேற்றைய பரிசோதனையில் இவர்களில் ஐவருக்கு வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னமும் சிறிதளவில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, இவர்கள் ஐவரும் தொடர்ந்தும் இரண்டு கிழமை அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தலிலில் இருக்க வேண்டும்.மேலும், இரண்டு கிழமையின் பின்னர் மீண்டும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என நோய் தொற்று தடுப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை நேற்றையதினம் 27 பேருக்கான பரிசோதனைகள் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.