கோதுமை மாவில் இவ்வளவு நன்மை இருக்கா? வாங்க என்னவென்று பார்ப்போம்

கோதுமை உலகில் முக்கியமான உணவுப்பொருட்களில் ஒன்று. இது உலகம் முழுதும் பயிரிடப்படுகிறது. இது ஒரு புல் வகையைச் சேர்ந்த தாவரமாகும். இது உலகில் அதிகம் பயிரிடப்படும் உணவு தானியங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. கோதுமை  உணவாகவும், அறுவடைக்குப்பின் கழிக்கப்பட்ட தாவர மிச்சங்கள் கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகிறது. உலகம் முழுவதும் பல விதமான கோதுமை இரகங்கள் விளைவிக்கப்படுகின்றன.

கோதுமையில் வெண்கோதுமைசெங்கோதுமை இரு முக்கியமான வகைகளாகும். ஆனால்வேறு பல இயற்கையான வகைகளும் உள்ளன. உதாரணமாகஎத்தியோப்பிய நிலங்களில் விளையும் ஊதா நிற கோதுமையைக் குறிப்பிடலாம். மேலும் கறுப்புமஞ்சள் மற்றும் நீலக் கோதுமை போன்ற கோதுமை வகைகளும் உள்ளன.

கலோரிகளை பொறுத்தவரை அரிசியில் உள்ள அதே அளவுதான் கோதுமையிலும் உள்ளது.

கோதுமையில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாதுஉப்புக்கள்,  நார்ச்சத்து,  மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ்,  இரும்புச்சத்து, ஜெரோட்மின், தயாமின், ரிபோஃப்ளோவின், நயாசின், ஃபோலிக் ஆசிட், காப்பர், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், மாங்கனீசு, துத்தநாகம், சல்ஃபர், குரோமியம் போன்றவை உள்ளது.

எரிச்சல் தீரும்

கோதுமை மாவை அக்கிப்புண், நெருப்பு புண், மேல் தோல் உரிந்த இடம் ஆகியவற்றில் வெண்ணெய் கலந்து பூசினால் எரிச்சல் தணியும். கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளின் மேல்  வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.

இரத்தம் சுத்தமாகும்

தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும். உடல் பலம் அதிகரிக்கும், ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.

வலிகள் குணமாகும்

முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட வலிகள்  குணமாகும்.

இன்னும் ஏராளமான மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ள கோதுமை பயன்படுத்தி செய்யப்பட்ட  உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.

புற்று நோயை தடுக்கும்

கோதுமையில்  புற்றுநோயைத் தடுக்கும் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. எனவே கோதுமையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்று நோய் ஏற்படும் அபாயம் தடுக்கபடுகிறது.