சமூக வலைத்தளங்களுள் வீரியமாகும் பெண்களுக்கெதிரான வன்முறைகள்

சதாரணமாக எமது சமூகத்தை நோக்கினால் அங்கே வன்முறைகள் இன்றைய அளவில் அதிகளவு காணப்படுகின்றன.

Unrecognizable girl chatting with friend on mobile phone.

வன்முறை எனும் போது மனிதனானவன் தனது அதிகாரத்தையும் ஆளுமையையும் பயன்படுத்தி தன்னைச் சார்ந்த மக்களையும் தன்னைச் சாராத மக்களையும் தனது ஆளுமைக்குள் உட்படுத்துகின்ற போது அதனை வன்முறை என்று கூறலாம்.

இன்றையளவில் வன்முறைகளாக குடும்ப வன்முறைகள், இன வன்முறைகள், பால் சார் வன்முறைகள், சமயம் சார் வன்முறைகள், ஊடகங்கள் சார் வன்முறைகள் என்றவாறு வன்முறைகளை இன்னும் பலவகைகளில் கூறிக்கொண்டே போகலாம்.

வன்முறை ஒன்று ஏற்படும் போது அங்கே பாரிய விளைவுகளையும் தாக்கங்களையும் நாம் எதிர் கொள்ளுகின்றோம். அவ் வன்முறைகள் பல்வேறு காரணங்கள் மற்றும் நோக்கங்கள் அடிப்படையில் இடம்பெறுவனவாகக் காணப்படுகின்றன.

இலங்கையைப் பொறுத்தவரையில் வன்முறைகள் எனும் போது பாரியளவில் பெண்களுக்கே நிகழ்வதாக 2018 இன் ருரே்சு ஆய்வில் கூறிப்பிட்டுள்ளது.

அவ் வன்முறைகள் உடல் ரீதியானது மட்டுமின்றி உளம் ரீதியான தாக்கங்களாகவும் காணப்படுகின்றன.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எனும் போது சாதாரணமாக குடும்பத்தில் இருந்தே ஆரம்பமாவதைப் பார்க்கலாம். அதைத் தாண்டி இன்றைய தொழினுட்ப வளர்ச்சி கொண்ட உலகிலே தொழினுட்ப கண்டுபிடிப்புக்கள் கூட பெண்களுக்கு பாதகமாக பல வேளைகளில் மனிதர்களால் பயன்படுத்தப்படுகிறன.

அந்த வகையில் சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய தொடரிணை ஊடகங்கள் பாரிய செல்வாக்குச் செலுத்துகின்றன. ஊடகங்கள் சாதாரணமாக தொடர்பாடல் எனும் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.

அதையும் தாண்டி சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய தொடரிணை ஊடகங்களை வன்முறை சார் நோக்குடனும் பயன்படுத்துகின்றனர்.

ஆதிக்க உணர்வுகள் மற்றும் பாலியல் இச்சைகள் போன்றவற்றையே அதிகளவில் கொண்டவர்கள், தம்மால் பெண்களை வன்முறைக்குள் உட்படுத்த முயல்வதையும் உட்படுத்துவதையும் அதிகளவில் சமூக ஊடகங்களில் காணலாம்.

சமூக ஊடகங்கள் எனும் போது அங்கே Facebook, messenger, whatsup, viber, instagram, twitter போன்ற ஊடகங்களே அதிகம் பாவிக்கப்படுகின்றன.

அந்த வகையில் இச் சமூக ஊடகங்களிலே அதிக வன்முறைகள் பெண்களுக்கெதிராக நடக்கின்றன.

பெண்களுக்கெதிரான இவ் வன்முறைகளை நிகழ்த்துபவர்கள் யார் என்று நோக்கினால் சாதாரணமாக ஆண்களையே கூறுவார்கள். ஆனால் ஆண்கள் மட்டுமின்றி பெண்கள் கூட பெண்கள் மீது வன்முறைகளை சமூக ஊடகங்களில் மேற்கொள்கின்றனர்.

இது வருத்தப்படத்தக்க விடயமாக காணப்படுகின்றது. அவ்வாறாக உளவியல் ரீதியான வன்முறைகளை அதிகளவில் பெண்கள் மீது பெண்களே மேற்கொள்கின்றனர்.

இப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சமூக ஊடகங்கள் ஊடாக ஆணோ அல்லது பெண்ணோ மேற்கொள்வதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றன.அக் காரணங்கள் பெருமளவில் எதிர்வினைச் சிந்தனைகளாகவே காணப்படுகின்றன.

பெண்ணிற்கான தொழில்வாய்ப்புக்கள் என்று நோக்கினால் அங்கே பெண்கள் மீது ஆண்கள் பாரிய வன்முறைகளை சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்கின்றனர்.