சற்று முன்னர் அரச தலைவர் கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் சற்று முன்னர் விசேட உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பில் அரச தலைவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி நிறைவு செய்யுமாறு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொது இடங்களுக்கு பிரவேசிப்பதற்கு தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.