ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் கொழும்பு நோக்கிப் படையெடுக்கும் அதிகளவான பொதுமக்கள்..!!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைத் தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் காலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு இரண்டு தினங்கள் கடந்த நிலையில், இன்று கொழும்புக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கடந்த 11ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், இன்றைய தினமே மக்களின் வருகை அதிகரித்துள்ளது.இன்றைய தினம் அதிகமானோர் புகையிரதம் மற்றும் பேருந்துக்களின் மூலம் கொழும்புக்கு வந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த நபர்களில் பெரும்பாலானோர் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழில் செய்பவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.தினமும் கொழும்பு நோக்கி வருவதற்கு சுமார் 11 ஆயிரத்து 500 பேர் ஆசனங்கள் பதிவு செய்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.