யாழ்.நகரில் சாரதி பயிற்சி பாடசாலை வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த முதியவர் மரணம்..!

யாழ்.நகர் 4ம் குறுக்கு தெருவில் கடந்த 6ம் திகதி லேணர்ஸ் வாகனம் மோதி படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஊர்காவற்றுறை தம்பாட்டியைச் சேர்ந்த  சின்னத்தம்பி லட்சுமணன் என்ற முதியவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். மீன் வியாபாரியான தம்பாட்டிக்கிராமத்தின் பாரம்பரிய கூத்துக் கலைஞருமாவார்.