நாடு முழுவதும் சுகாதார நடைமுறைகளை மீறுவோரை கண்காணிக்க 785 பொலிஸார் கண்காணிப்பு பணியில்!

பொதுமக்கள் சரியானமுறையில் முககவசம் அணிவது உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க 785 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருக்கின்றது.

குறித்த பொலிஸார் நாடு முழுவதும் தமது கடமைகளை புரிந்து கொண்டிருப்பதாகவும் சுகாதார நடைமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை அவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.