கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

இலங்கையில் மேலும் 22 கொவிட் மரணங்கள் நேற்றைய தினம்(08) பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,555 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்று உறுதியான மேலும் 508 பேர் இன்று, இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 570,436 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 12,058 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஏனையோர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.