அவதானமாக இருங்க! பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் இந்த பிரச்சினை எல்லாம் வருமாம்; உஷார்!

பதப்படுத்திய உணவுகள் என்பவை அதிக காலம் கெடாமல் இருக்க அல்லது அதிக சுவை தருவதற்காக மாற்றம் செய்யப்பட்டவை. பொதுவாக உப்பு, எண்ணெய், சர்க்கரை அல்லது நொதித்தல் முறையை பயன்படுத்தியிருப்பார்கள்.

இந்தப் பிரிவில் அடங்குபவை பாலாடைக் கட்டி, பன்றி இறைச்சி, வீட்டில் தயாரித்த ரொட்டி, டின்களில் அடைக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள், புகை மூலம் பதப்படுத்திய மீன், பீர் போன்றவை அடங்குகின்றது.

உண்மையில் இதனை நாம் அதிகளவு உட்கொள்ளுவது ஆபத்தையே விளைவிற்கும். தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்

  • பதப்படுத்தப்படும் உணவுகளை மக்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு தீவிரமான இதய நோய் பாதிப்புகள் உண்டாகும்.
  • அதிக அளவில் பதப்படுத்தப்பட்டு பேக்கிங் செய்த உணவுகளை சாப்பிட்டு வருவதன் மூலம் இரண்டாவது மாரடைப்பு அல்லது பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு 40% அதிகமாக உள்ளது.
  • குறிப்பாக மற்ற வகை உணவுகளை சாப்பிடுவதை விடவும், அதிகம் பதப்படுத்தப்படும் உணவுகளை சாப்பிடும் மக்களுக்கு மோசமான ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.