தினமும் தயிர் சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா? வாங்க அறிந்து கொள்வோம்

ஆரோக்கியம் என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். காசு பணம் இல்லாவிட்டால் கூட ஆரோக்கியம் இருந்தால் எப்படி வேண்டுமானலும் சம்பாதித்து கொள்ளலாம். ஆனால் பலர் சரியான சாப்பாடு, தூக்கம் எதுவும் இல்லாமல் தங்களின் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்கின்றனர்.

இதன் விளைவாக கொரோனா காலகட்டத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் தயிர் உடலுக்கு பல நன்மைகளை தருகின்றது. தயிரில் அதிகம் புரதசத்து அதிகமாக இருப்பதால் உடல் எடை குறையவும் உதவுகிறது. சரி வாங்கதினமும் தயிர் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..

நன்மைகள்:-

  • தயிர் சாப்பிடும் விஷயத்தில் எவ்வளவு கலோரிகள் வரை நாம் எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம். சில தயிர் பாக்கெட்டுகளில் 100 கலோரிகளும் 6 கிராம் புரதமும் இருக்கும். அதற்குப் பதில் அதிக கலோரிகள் இருந்தாலும் 15 கிராம் வரை புரதம் இருக்கும் தயிரைப் பயன்படுத்துதல் நல்லது.
  • சிலர் அடிக்கடி தயிர் சாதம் சாப்பிடுவார்கள். இவ்வாறு சாப்பிடுவது சாதாரணமாகவே தோன்றினாலும் அது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். தயிர் சாப்பிடும் போது தேன், தானியம், நட்ஸ், பழங்கள் போன்ற வேறு உணவுப் பொருட்களையும் சேர்த்துக் கொள்வது தவறு.

  • நீங்கள் வாங்கப் போகும் தயிர் பாக்கெட்டுகளில் 18 கிராமுக்கு அதிகமாக சர்க்கரையின் அளவு இருந்தாலோ அல்லது தயிர் பாக்கெட் லேபிளில் சர்க்கரை முதலாவது இடத்தில் இருந்தாலோ அதைத் தவிர்த்து விடுங்கள். அது தான் கொழுப்பை அதிகமாக்குகிறது.
  • புரதம் அதிகமாக இருக்கும் தயிர் பாக்கெட்டுகளை நீங்கள் தைரியமாக வாங்கி சாப்பிடலாம். கடைகளில் விற்கப்படும் தயிரை வாங்கும் போது அதில் எவ்வளவு கொழுப்பு, கலோரி, சர்க்கரை என்று பார்த்துப் கவனமாக வாங்க வேண்டும்.