செலுத்தப்பட்ட பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் வெளியான தகவல்!..

நாட்டில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

 

பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1, 081, 303 எனவும் பைசர் தடுப்பூசியே பூஸ்டர் மாத்திரையாக வழங்கப்படுகின்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் 4483 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.