சுகாதார பணியாளர்களின் பணிப் பகிஸ்கரிப்பினால் பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நோயாளர்கள்

சுகாதார பணியாளர்களின் பணிப்பகிஸ்கரிப்புக் காரணமாக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் பெரும் சிரமத்தினை எதிர்நோக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண சுகாதார பணியாளர்கள் ஏழு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு வருகை தந்த பெரும்பாலான நோயாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் நோயாளர் சிலர் திருப்பியும் சென்றுள்ளனர்.

மலையக பெருந்தோட்டபகுதியில் டிக்கோயா கிழங்கன், பொகவந்தலாவ, மஸ்கெலியா மற்றும் கொட்டகலை ஆகிய வைத்தியசாலைகளிலும் சுகாதார பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில்  ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.