தொடரும் எரிவாயு வெடிப்புகள் – விசாரணைக்கு அழைக்கப்பட்ட உயர் அதிகாரிகள்

எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்புகள் வெடிப்பு சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட இரண்டு முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக பிரதிவாதிகள் நாளை அழைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தரப்பினர் நாளை முற்பகல் 11.00 மணிக்கு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நிஹால் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

அதன்படி, எரிவாயு விபத்துகளில் அரசு நிறுவனங்கள் காட்டும் அலட்சியம் மற்றும் பொதி செய்யப்பட்ட திகதி மற்றும் எரிவாயு சிலிண்டரின் உள்ளடக்கங்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி அளிக்கப்பட்ட இரண்டு முறைப்பாடுகள் தொடர்பில் விசாரிக்கப்படும்.

இதன்படி, இந்த விசாரணைக்கு ஆஜராகுமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர், இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் இந்த முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நிஹால் சந்திரசிறி தெரிவித்துள்ளார்