தமிழகத்தில் இந்திய முப்படை தளபதி பயணித்த ஹெலிகொப்டர் விபத்து! – ஏழு பேர் பலி

 

இந்திய முப்படைகளின் தளபதி பயணித்த ஹெலிகொப்டர் தமிழகத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ள நிலையில், ஐவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று இன்று பிற்பகலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டுச் சென்றது.

இந்நிலையில், குறித்த ஹெலிகொப்டர் கட்டுப்பாட்டை இழந்தது காட்டேரி மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது குறித்த ஹெலிகொப்டரில் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் ஏழு பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஐவர் மீட்கப்பட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏனையவர்கள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

உடல்கள் தீயில் கருகியுள்ளதால் உயிரிழந்தவர்கள் யார்? யார்? என அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த ஹெலிகொப்டரில் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத்தும் பயணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.