சிம்ம ராசியின் பொதுவான குணங்கள்; வாங்க என்னவென்று பார்ப்போம்

சிம்ம ராசியின் அதிபதி சூரிய பகவானாவார். சிம்ம ராசியில் மகம், பூரம், உத்திரம் நட்சத்திரத்தின் 1ம் பாதம், ஆகியவை இதில் அடங்கும். சிம்ம ராசிக்காரர்கள் அழகான அங்க அடையாளங்களை கொண்டிருப்பார்கள். பேச்சிலும், நடவடிக்கைகளிலும் ஒரு வித கம்பீரம் இருக்கும்.

இவர்களுக்கு முன்கோபம் அதிகம் இருக்கும். எல்லா விஷயங்களிலும் வேகமாக செயல்படுவார்கள் சிம்ம ராசிக்காரர்கள். இவர்கள் ஒரு விஷயத்தில் முடிவெடுத்துவிட்டால் அதை மாற்றி கொள்ள மாட்டார்கள். எந்த விஷயத்திலும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டார்கள்.

இவர்கள் வீரமும், நெஞ்சு உறுதியும் அதிகம் கொண்டவர்கள். எதற்கும் அஞ்சாத பேர்விழிகள். அன்பு, பணிவு, மரியாதை அனைத்தையும் ஒரு சேர கொண்டவர்கள். இவர்கள் எதிரிகளை கூட மன்னிப்பார்கள், ஆனால் துரோகிகளை மன்னிக்க மாட்டார்கள்.

இவர்கள் பேச்சில் ஒரு தெளிவு இருக்கும். இவர்களில் பெரும்பலனோர்க்கு பண வசதிக்கு குறைவு இருக்காது. இவர்கள் தற்புகழ்ச்சி உடையவர்கள். இவர்களிடம் மிரட்டி வேலை வாங்குவதை விட அன்பாக பேசி வேலை வாங்குவது எளிது.

சிம்ம ராசிக்கரர்கள் விடாமுயற்சி அதிகம் கொண்டவர்கள். இவர்கள் வீண் சண்டைக்கு போக மாட்டார்கள். ஆனால் சண்டை என்று வந்துவிட்டால் இரண்டில் ஒன்று பார்க்காமல் விடமாட்டார்கள்.

இவர்கள் நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவர்கள். பிறர் செய்யும் சிறு தவறை கூட பெரிதாக்கி அவர்களை தண்டிப்பார்கள். இவர்கள் பெற்றோர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வார்கள்.

இவர்களில் பெரும்பாலோனோர் படித்த படிப்பிற்கும், செய்யும் வேலைக்கும் சம்மந்தம் இருக்காது. இவர்கள் சரியான சந்தேக பேர்வழிகள். இவர்கள் செலவுகளை பற்றி கவலை பட மாட்டார்கள்.

பிறரிடம் கடன் வாங்குவது இவர்களுக்கு பிடிக்காது. கடன் வாங்கினாலும் அதை சரியாக திருப்பி செலுத்தி விடுவார்கள். கோபம் அதிகம் கொண்டவர்கள், அதனால் பிறருடன் இணக்கமாக இருபது கடினம்.