இன்றிலிருந்து ஆரம்பம்! ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் விடுக்கப்படும் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தனது வீரியத்தை காட்டத் தொடங்கியுள்ளது.நேற்று மட்டும் கொரோனா தொற்றுள்ள 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்றிலிருந்து (1) மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய காலம் என பல தரப்பினராலும் அறிவுறுத்தப்பட்டுவருகின்றது.கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் பலர் அதனை அலட்சியம் செய்து வெளியில் நடமாடுவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.இவ்வாறு அலட்சிய போக்கில் செயற்பட்டதால்தான் இத்தாலி தற்போது மரண தேசமாக மாறியுள்ளது.

கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போராடவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நாம் ஒவ்வொருவரும் தள்ளப்பட்டுள்ளோம்.வெளியே வராதீர்கள்… வீட்டிலேயே முடங்குங்கள்… இன்றிலிருந்து ஆரம்பிக்கிறது மிக மிக முக்கிய நாட்களான எதிர்வரும் நாட்கள்….