கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி!

நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரணால பகுதியிலுள்ள வீடொன்றில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறில் கணவன் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (07) மாலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்த கணவன், மனைவியின் தலையில் தேங்காய்க் கட்டையால் அடித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த மனைவி, கையில் வைத்திருந்த கத்தியால் கணவரின் கழுத்தில் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் அயலவர்களால் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவரது கணவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மொரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான யாயா 07 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த தம்பதியினர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மொரகெட்டிய பிரதேசத்தில் உள்ள போடிம பிரதேசத்திற்கு வந்திருந்ததாகவும், அவர்கள் இதுவரை சட்டப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நவகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.