சஜித் தரப்பு எடுத்துள்ள முடிவு

அண்மைய நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த, சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் இன்று (08) முதல் மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தீர்மானித்துள்ளனர்.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுடன் நேற்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனை கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார உறுதிசெய்துள்ளார்.

நாடாளுமன்றில் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.