புதிய கேப்டனாக நியமிக்கப்படும் CSK அணியின் நட்சத்திர வீரர்? இது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்

ஐபிஎல் தொடரில் சி எஸ் கே அணியின் நட்சத்திர வீரரான சின்ன தல சுரேஷ் ரெய்னாவை கேப்டன் பதவிக்கு நியமிக்க புதிய அணி ஒன்று அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 4 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுவிட்டனர்.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர வீரராக திகழ்ந்த சுரேஷ் ரெய்னா அணி நிர்வாகத்தால் தக்க வைக்கப்படவில்லை. இந்நிலையில் சுரேஷ் ரெய்னா அடுத்ததாக எந்த அணிக்காக விளையாடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி ஐபிஎல் தொடரில் புதிதாக வந்துள்ள 2 அணிகள் ஏலத்திற்கு முன்பாகவே 2 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரரை நேரடியாக தேர்வு செய்துக்கொள்ளலாம். அதன்படி அகமதாபாத் அணி, சுரேஷ் ரெய்னாவை கேப்டனாக நியமிக்க திட்டமிட்டு அணுகியுள்ளது.

மேலும் ரூ.14 கோடி வரை அவருக்கு கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிகிறது. ஆனால் சுரேஷ் ரெய்னா இதனை ஏற்பதில் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.

ஐபிஎல் மெகா ஏலம் குறித்து பேசியிருந்த ரெய்னா, சிஎஸ்கேவுக்கு பிறகு நான் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகாக தான் விளையாட விரும்புகிறேன். அதுதான் எனது ஆசை எனக்கூறியிருந்தார்.