எந்த பெண்ணையும் வேகமாக கர்ப்பம் தரிக்க செய்துவிடும் |டாக்டர்களுக்கே பிடித்த செடி PREGNANCY TIPS

அரிய மூலிகைகளின் அற்புத மருத்துவக் குணங்களை ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். காலுக்கடியில் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்ட மூலிகைகளை அறியாமலே தேவையற்ற களையாக நினைத்து அழித்துவிட்டனர். இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் நோய்களின் கூடாரமாக தங்கள் உடம்பை ஆக்கிக்கொண்டு, தினமும் மாத்திரை விழுங்கினால்தான் வாழ்வு என்று வாழ்கின்றனர்.

‘இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே!’கண்ணதாசனின் இந்தப் பாடல் வரிகளின்படி, வீதியெங்கும் விளைந்து கிடக்கும் விலையில்லா மருந்துகளான மூலிகைகளைப் புறக்கணித்ததன் விளைவுதான், புற்றுநோய் உள்ளிட்ட ஆட்கொல்லி நோய்கள் மனிதகுலத்தை ரணகளப்படுத்திக் கொண்டிருக்கின்றன. நோய்க்களுக்கான தீர்வைத் தேடுவதில்கூட சமுதாய அந்தஸ்து பார்க்கும் மக்களின் மனநிலையைப் பயன்படுத்தி, சாதாரண காயங்களுக்குக்கூட, ஆயிரக்கணக்கில் பணத்தைக் கறந்து விடுகின்றன,

பல மருத்துவமனைகள். இத்தகைய மாயா மனநிலையை ஒதுக்கிவிட்டு, செலவில்லாத எளிய தீர்வு ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டால், உங்களுக்கான பிரச்னைகளைத் தீர்த்து வைக்க காத்திருக்கின்றன, விதவிதமான மூலிகைகள். அந்த வகையில் ஈரமான இடங்களிலும், விளைநிலங்களிலும் தானாக விளைந்து கிடக்கும் மூலிகைதான், அம்மான் பச்சரிசி. இதில், சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரண்டு வகைகள் இருக்கின்றன. இரண்டின் மருத்துவ குணங்களும் ஒன்றுதான்.

இந்த நிலைக்குக் காரணம் நம் முன்னோர்களின் அறிவுப் பொக்கிஷங்களை அலட்சியப்படுத்தியதன் விளைவேயாகும்..முக்காலத்தையும் அறிந்தவர்களான சித்தர்களும் ஞானிகளும் கண்டறிந்த மருத்துவம்தான் சித்த மருத்துவம். இந்த மருத்துவம் மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டது. இத்-த-கைய மருத்துவத்தன்மை வாய்ந்த மூலிகைகளைப் பற்றி நாம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் அம்மான் பச்சரிசி என்ற மூலிகையைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே.. இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு… வித்தியாசமான பெயரைக் கொண்ட இது வியக்கத்தக்க மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

பூண்டு இனத்தைச் சேர்ந்தது. வெண்ணிறமும் செந்நிறமும் சேர்ந்து காணப்படும்.இவற்றில் சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகள் உண்டு. இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.சரி வாருங்கள் அம்மான் பச்சரிசி செடி பற்றிய மேலதிக விபரங்களை கீழே உள்ள வீடியோ மூலம் விரிவாக காணுவோம்