ஆசிய இளையோர் பரா ஒலிம்பிக் போட்டியில் 11 பதக்கங்களை வென்ற இலங்கை

ஆசிய இளையோர் பரா ஒலிம்பிக் போட்டியின் மூன்று நாட்கள் முடிவில் இலங்கை அணி மூன்று தங்கம் உளப்பட மொத்தம் 11 பதக்கங்களை வென்றுள்ளது.

இலங்கை அணி நீச்சல் போட்டிகளில் 4 பதக்கங்களையும், மற்ற போட்டிகளில் 7 பதக்கங்களையும் வென்றுள்ளனர். நீச்சலில் லைசியம் சர்வதேச பாடசாலையின் கலினா பஸ்நாயக்க இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

குளியாப்பிட்டிய சுரதூத பாலிகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜனனி விக்கிரமசிங்க தடகளப் போட்டியில் மூன்று வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார். அதே சமயம் கெக்குனகொல்ல அரக்யால முஸ்லிம் கல்லூரியை சேர்ந்த மொஹமட் சப்ரான் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.