சங்கானை வீடொன்றில் 14 பவுண் நகை திருட்டு; பொலிஸார் தீவிர விசாரணை

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை நிற்சாமம், சிலம்பு புளியடி கோவிலுக்கு அருகே உள்ள வீட்டில் இருந்து 14 பவுண் நகை திருடப்பட்டுள்ளது.

குறித்த சமபவம் நேற்றையதினம் (06) இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் உள்ளவர்கள் நேற்று மு.ப 10 மணிக்கு கொண்டாட்டம் ஒன்றிற்கு சென்றுவிட்டு, நேற்று பி.ப. 5 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது கதவு உடைத்து நகை களவாடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.