பிடிவாதமான தோல் நோய்களை வேரிலிருந்து நீக்கும் பிரமத்தண்டு…!

பிரம்மதண்டு மருத்துவக் குணங்கள்…குடல்புழு குறைய :பிரம்மதண்டு வேரை அரைத்து 5 கிராம் அளவு எடுத்து 50 மில்லி வெந்நீரில் கரைத்து, காலை வெறும் வயிற்றில் கொடுக்க குடல்புழு, வயிற்றுப்பூச்சிகள் குறையும்.

வைரஸினால் இலங்கையில் கண் நோய் …கண் நோய்கள் குறைய :பிரம்மதண்டு பூவை நீரில் ஊறவைத்து அந்த நீரை 40 நாள் தலைக்கு தேய்த்து குளிக்க கண் பார்வை மங்கல், க‌ண் ‌எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்ற கண் நோய்கள் குறையும்.பிரமத்தண்டுப் பூக்கள் 20 எண்ணிக்கையில் எடுத்து ஒரு பானையில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அந்த தண்ணீரை காலை, மாலை என 21 நாட்கள் தலைக்கு குளித்து வந்தால் கண் சம்பந்தமான நோய்கள் குறையும்.

இருமல் குறைய :பிரமத்தண்டு இலையை காய வைத்து பொடி செய்து தேன் கலந்து தினமும் காலை, மாலை சாப்பிட இருமல் குறையும்.நுரையீரல் நோய் குறைய :பிரம்மதண்டு சமூலத்தை எரித்து சாம்பலை எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சமூல சாம்பலில் 3 அரிசி எடை எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் நோய் குறையும்.

10 நிமிடத்தில் பல் வலி குணமாக இதை …பல்வலி குறைய :பிரமத்தண்டு இலை, பூ, காய் இவற்றை காய வைத்து பொடி செய்து உப்பு சேர்த்து தினமும் பல்துலக்கி வர பல்வலி குறையும்.

பல்லில் சீழ் வடிதல் குறைய :பிரம்மதண்டு இலைகளை எடுத்து நன்கு எரித்து சாம்பலாக்கவும். பின்பு அந்த சாம்பலை எடுத்து தினமும் பல் தேய்த்து வந்தால் பல்லில் சீழ் வடிதல் குறையும்.

தோல் நோய்கள் குறைய :பிரமத்தண்டு சமூலத்தை (பிரமத்தண்டு செடி) நன்கு காயவைத்து எரித்து சாம்பலாக்கி மீண்டும் சட்டியில் போட்டு எரித்து சலித்து உளுந்தம்பருப்பு அளவு சாம்பலை வெண்ணெயில் குழப்பி காலை வேளையில் மட்டும் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் குறையும்.

கண் நோய்கள் குறைய :பிர‌ம‌த்த‌ண்டுப் பூக்க‌ள் எடுத்து ந‌ன்றாக‌க் கொதிக்க‌ வைத்து அதை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கண் நோய்கள் குறையும்.