இலங்கையில் மேலும் 23 கொவிட் மரணங்கள்

இலங்கையில் மேலும் 23 கொவிட் மரணங்கள் நேற்றைய தினம்(05) பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,484. ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட் தொற்று உறுதியான மேலும் 568 பேர் இன்று (06) இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 568,250 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.