வெற்றிலை வாங்கச் சென்ற வயோதிபப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!!

மகாவலி கங்கையில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஐந்து பிள்ளைகளின் தாயான 88 வயதுடைய நாவலப்பிட்டி மாகும்புர பிரதேசத்தை சேர்ந்த கே.வெள்ளையம்மா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என நாவலப்பிட்டிப் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;குறித்த வயோதிப பெண் வெற்றிலை வாங்கி வருவதாக கூறிவிட்டு நேற்று வீட்டிலிருந்து சென்ற நிலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத அவரை காணவில்லையென தேடிய போதே மகாவலி கங்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மகாவலி ஆற்றை ஊடறுத்து செல்லும் ரயில் பாலத்தில் நடந்து செல்கையிலே தவறி ஆற்றில் வீழ்ந்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணை தொடர்வதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.