புத்தளம் தனிமைப்படுத்தல் மையத்திலேயே அடையாளம் காணப்பட்ட 10 நோயாளிகள்..!!

புத்தளத்தில் நேற்று அடையாளம் காணப்பட்ட 10 கொரொனா நோயாளர்கள், அங்கு அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மலேசியா, இந்தோனேசியாவிற்கு சென்று வந்த ஒருவர் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணையில், மேலும் சிலர் இந்த நாடுகளில் நடந்த மத வழிபாடுகளிற்கு சென்று வந்தது தெரிய வந்தது.இதையடுத்து, புத்தளத்தில் ஒரு கிராமமே தனிமைப்படுத்தப்பட்டு, 29ஆம் திகதி புத்தளம் சாஹிரா கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே 10 பேர் தொற்றிற்கு இலக்காகியது தெரிய வந்தது.8 ஆண்களும், 2 பெண்களுமே தொற்றிற்கு இலக்காகியுள்ளனர். அவர்கள் நேற்றிரவு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.