சிறிலங்காவிற்கு எதிராக அதிரடியாக வழக்குத் தொடுத்தது சீன நிறுவனம்!

சிறிலங்காவிற்கு எதிராக சிங்கப்பூர் தீர்ப்பாயத்தில் சீனா வழக்குத் தொடர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், மூவர் அடங்கிய நடுவர் குழாம் ஒன்றின் மூலம் இந்த முறைப்பாடு விசாரணை செய்யப்பட வேண்டுமெனவும் இரண்டு தரப்பிலிருந்தும் தலா ஒருவரை நியமிக்க முடியும் எனவும் சீன நிறுவனம் கோரியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சேதன உரம் நிராகரிக்கப்பட்டமைக்கு நட்டஈடாக 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென கோரி சீனவின் Quingdao Seawin Biotech நிறுவனம், சிங்கப்பூர் தீர்ப்பாயத்தில் சிறிலங்காவிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது.

சிறிலங்காவின் Colombo Commercial Fertilizers Ltd நிறுவனத்திடமே சீன நிறுவனம் நட்டஈடு கோரியுள்ளது.