நேரடிக் காணொளி இணைப்பு மூலம் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்ற இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர்..!!

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று காலை நேரடிக் காணொளி இணைப்பு (வீடியோ கொன்பரன்ஸ்) மூலம் காண்பித்து தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

மருந்துப்பொருட்கள் வந்த விமானத்தில் இந்தியாவில் இருந்து வந்த அவர் சுய தனிமைப்படுத்தலில் இருப்பதால், ஜனாதிபதியிடம் நியமனக் கடிதத்தை கையளிக்கும் நிகழ்வு நேரடியாக நடைபெறவில்லை.கடமைகளை பொறுப்பேற்ற இந்தியத் தூதுவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடனும் தொலைபேசியில் உரையாடினார்.