மீண்டும் சமூக இடைவெளி விதிமுறைகளை அமுல்படுத்தும் எண்ணம் கிடையாது…!! தென்கொரியாவின் அறிவிப்பு..!!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை சிறப்பான முறையில் கட்டுப்படுத்திய நாடு என பெயர் பெற்ற தென்கொரியா, மீண்டும் வைரஸ் தொற்றால் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.

தென்கொரியாவின் சியோலில் இரவு விடுதிகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72ஆக உயர்வடைந்துள்ளது.
இதனால், தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்படுத்தப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.இந்தநிலையில், இதன்தொடர்பாக கருத்து தெரிவித்த தென்கொரிய துணை சுகாதார அமைச்சர் கிம் காங் லிப், ‘புதிதாக கிருமித்தொற்று கண்டோரின் எண்ணிக்கை 50இற்க்குள் இருக்கும் வரையிலும் இதில் பாதிப்புக்கு உள்ளான பேரில் 95 வீதமானோரை தேடிப் பிடிக்கும் நிலை இருக்கும் வரையிலும், சமூக இடைவெளி விதிமுறைகளை அமுல்படுத்தும் எண்ணம் இல்லை.
இப்போதைக்கு புதிதாக தோன்றும் தொற்று சம்பவங்களை கூர்ந்து கவனித்து வருகிறோம். அத்துடன், சமூக இடைவெளி கொள்கையை பரிசீலிக்க வேண்டுமா என்றும் ஆய்வு செய்து வருகிறோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.தென்கொரியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 10,991பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 260பேர் உயிரிழந்துள்ளதாகவும், தென்கொரிய நோய்க் கட்டுப்பாடு தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.